அட்டாளைச்சேனை கொரோனா வைத்தியசாலைக்கு கட்டில்கள் வழங்கி வைத்தல்

(எஸ்.எம்.அறூஸ், றிஸ்வான் சாலிஹூ)

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராபக்ஸவின் எண்ணக்கருவில் உருவான 10 நாட்களில் பத்தாயிரம் கட்டில்களைத் தயாரித்து கொரோனா தொற்றாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கான  20 கட்டில்கள் இன்று (24) வழங்கி வைக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.பி.எம்.ரஜீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டபிள்யு. டி.வீரசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டில்களை வழங்கி வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்  டபிள்யு. டி.வீரசிங்கவின் அட்டாளைச்சேனை இணைப்பாளர் எஸ்.எம்.ஜெஸீலின் வேண்டுகோளின் பேரில் சுமார் 20 கட்டில்கள் அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்படவுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா, கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அதிதியட்சகருமான டாக்டர் எம்.ஏ.நபீல், பொதுஜன பெரமுனயின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க அவர்களின் இணைப்பதிகாரியுமான தேசகீர்த்தி ஏ.எம்‌.நிஹால், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உத்தியோகத்தர் முபாரக் அலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





அட்டாளைச்சேனை கொரோனா வைத்தியசாலைக்கு கட்டில்கள் வழங்கி வைத்தல் அட்டாளைச்சேனை கொரோனா வைத்தியசாலைக்கு கட்டில்கள் வழங்கி வைத்தல் Reviewed by Editor on May 24, 2021 Rating: 5