பதுளை மாவட்ட கொவிட், கல்விக் குழுக் கூட்டம் இன்று (17) திங்கட்கிழமை ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் ஏ.ஜே.முஸம்மில் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், அந்த சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் முன்னோக்கிப் பயணித்தால் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் ஒன்லைன் தொழிநுட்பத்தை பயன்படுத்தி கல்வி நிகழ்ச்சிகளை மிகவும் திறம்பட நடத்துவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன டேனிபிடிய, ஊவா மாகாண பிரதான செயலாளர் திரு. P.B. விஜயரத்ன, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி. சந்தியா அபன்வெல உள்ளிட்ட கல்வி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
