(றிஸ்வான் சாலிஹூ)
இராசாயன கலவையற்ற பாரம்பரிய மரபு ரீதியில் முற்று முழுதாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட HO - MADE சமையல் கலவையினை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான்(நழிமி) அவர்களிடம் இளம் உற்பத்தியாளரான அக்கரைப்பற்றைச் சேர்ந்த முகமட் பைசர் அவர்களினால் இன்று (24) வழங்கி வைத்து அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் இந்த உற்பத்தியாளரை அக்கரைப்பற்று பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல். சர்தார் மிர்ஸா,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ் பாருக் மற்றும் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம். இர்பான் ஆகியோர் ஊக்கப்படுத்தியதோடு, இவர்கள் அனைவருக்கும் உற்பத்தியாளரினால் இச் சமையல் கலவை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
