அம்பாறை மாவட்டம் உட்பட மேலும் 12 மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு
தடுப்பூசி ஏற்றும் பணி இம்மாதம் 8ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது என்று கொவிட் – 19 தடுப்பு செயற்பாட்டு மையத்தின் பிரதானியும், இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
சீனத் தயாரிப்பான சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், நுவரெலியா, மாத்தளை, கேகாலை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, அநுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனறாகலை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் 8ஆம் திகதி முதல் தடுப்பூசி ஏற்றப்படுகிறது!!!
Reviewed by Editor
on
June 03, 2021
Rating:
