இராஜாங்க அமைச்சர் கெளரவ எஸ்.வியாழேந்திரன் அவர்களின் அழைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கௌரவ விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் கௌரவ லொஹான் ரத்வத்த ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதுடன் அங்கே நிலவும் பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
மண்முனை வடக்கு திருப்பெருந்துறைப் பிரதேசத்தில் "வளமான சிறைச்சாலையிலிருந்து விவசாய நிலத்திற்கு" எனும் தொனிப்பொருக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் சேதனப்பசளை உற்பத்தி மற்றும் காய்கறி உற்பத்திகள் தொடர்பான செயற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டதோடு தேவையான வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வளங்கப்பட்டுள்ளது.
