ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு....

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று (04) வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது .

இதன் போது உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான கொளரவ நீதியரசர் கோடா கொட தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து தவிர்த்து கொள்வதாக அறிவித்தார்.
எனவே இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர்வரும் 11/06/2021 வரை ஒத்திவைக்கப்பட்டது.
இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஸ்தி ஹபீப் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜாராகினர்.
குறித்த வழக்கு சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

(ACMC Media Unit)







ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு.... ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல்  வழக்கு.... Reviewed by Admin Ceylon East on June 04, 2021 Rating: 5