சாதனை படைத்த மாணவனை வாழ்த்தும் பாடசாலை சமூகம்!!!

(றிஸ்வான் சாலிஹு)

அண்மையில் நடைபெற்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்ட கல்லூரி சார்பாக பங்கு பற்றிய  மாணவன் நியாஸ் அஷ்ரக் அஹமட் இப்போட்டியில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளதாக கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இப்போட்டியில் கிழக்கு மாகணத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாணவர் இவர் மாத்திரமே என்பதோடு, சாதனை படைத்த இம்மாணவனுக்கும், இம்மாணவருக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும்  நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று அதிபர் உவைஸ் மேலும் தெரிவித்துள்ளார்.




சாதனை படைத்த மாணவனை வாழ்த்தும் பாடசாலை சமூகம்!!! சாதனை படைத்த மாணவனை வாழ்த்தும் பாடசாலை சமூகம்!!! Reviewed by Editor on June 04, 2021 Rating: 5