எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று (13) ஞாயிற்றுக்கிழமை மின்சக்தி அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக குற்றம் சாட்டி இலங்கை பொதுஜன பெரமுனாவின் நேற்றைய அறிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒப்புதலுக்குப் பிறகு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையிலான வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவால் விலையை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை பொதுஜன பெரமுண கட்சியின் பொதுச் செயலாளர் சாகர கரியவாசம் கூறிய கூற்றுக்களை அமைச்சர் கமன்பில நிராகரித்ததோடு மேலும் இந்த கடிதம் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மட்டுமே சவால் விடுகிறது என்றும் அவர் தனது ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
