கல்வியமைச்சர் வௌியிட்ட விசேட அறிவிப்பு…!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பமாகும் திகதி சம்பந்தமாக ஆராய்வதற்காக கல்வி அமைச்சில் இன்று (16) புதன்கிழமை விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சரியான சூழல் நாட்டில் உருவானதும், சுகாதார பரிந்துரைகளின் படி முடிந்தளவு அவசரமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதே எமது நோக்கம் என்று கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எவ்வாறாயினும் பாடசாலைகள் மீள திறக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபர்கள் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு தடுப்பூசி வழங்குவதற்காக சுமார் 279,020 தடுப்பூசிகள் தேவைப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் இல்லாத பகுதிகளில் பாடசாலைகளை திறக்குமாறு பல்வேறு தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைத்தவுடன் மீண்டும் இலங்கை பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி குறித்த தீர்மானம் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை சுகாதார பாதுகாப்பு முறைக்கமையவே மீண்டும் திறக்க வேண்டும். பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.



கல்வியமைச்சர் வௌியிட்ட விசேட அறிவிப்பு…! கல்வியமைச்சர் வௌியிட்ட விசேட அறிவிப்பு…! Reviewed by Editor on June 16, 2021 Rating: 5