கலாநிதி பட்டத்தையும் பெற்று சமூகம் போற்றுபவராக வர வாழ்த்துகிறேன் - அதிபர் எஸ்.றிபாயுடீன்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.ஏ.றஸாக் தனது "முதுதத்துவமானி" (MPhil) பட்டத்தை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஊடாக பெற்று பாடசாலைக்கும் தனது சமூகத்திற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளதை பாராட்டுகிறேன் என்று அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.றிபாயுடீன் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரதி அதிபர் அப்துல் றசாக் 15வருட ஆசிரிய சேவையை கொண்டவராவார். அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று , இப்பாடசாலையின் இருந்து முதலாவதாக பல்கலைக்கழகத்திற்கு கலைப்பிரிவில் இருந்து சென்று கலைமாமணி பட்டத்தை 2004ஆம் ஆண்டு 1st Class பெற்று பாடசாலைக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தார்.

இவர் தனது ஆசிரிய பணியில் உள்வாங்கப்பட்டதன் பின்னர் தரம்-11 மற்றும் தரம்-12 மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தமிழ் பாடத்தில் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கும், பல்கலைக்கழகம் செல்வதற்கும் மிகவும் அரும்பணியாற்றியுள்ளதோடு, பாடசாலையில் தன்னால் முடியுமான அளவு அதிபர் மற்றும் சக ஆசிரியர்களுடன் இணைந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்பதை இவ்விடத்தில் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

தரம்-11 மற்றும் தரம் - 12 மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சுமார் 15க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் இவரால் வெளியிடப்பட்டுள்ளதோடு, பெருவெளி என்ற சஞ்சிகையின் ஆசிரியர் குழுவின் செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு மாணவ சமூகத்திற்கு பணியாற்றியுள்ளதோடு, இறுதியாக நடைபெற்ற அதிபர் சேவை பரீட்சையிலும் சித்தியும் பெற்றுள்ளார்.

அப்துல் மஜீத் மற்றும் மதீனா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரான இவர், எதிர்வரும் காலத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்று இந்த சமூகம் பாராட்டக்கூடியவராகவும் வாழ இவரை வாழ்த்துகிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் அதிபர் றிபாயுடீன் தெரிவித்துள்ளார்.




கலாநிதி பட்டத்தையும் பெற்று சமூகம் போற்றுபவராக வர வாழ்த்துகிறேன் - அதிபர் எஸ்.றிபாயுடீன் கலாநிதி பட்டத்தையும் பெற்று  சமூகம் போற்றுபவராக வர வாழ்த்துகிறேன் - அதிபர் எஸ்.றிபாயுடீன் Reviewed by Editor on June 12, 2021 Rating: 5