(றிஸ்வான் சாலிஹு)
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான துறைசார் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் இன்று (21) திங்கட்கிழமை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடல் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஃஸீர், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எம்.ஐ.அஹ்மத் சஜீர், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி திட்டத்தில் உள்ளடங்கும் குறித்த வீதிகளின் நிர்மாண பணிகளை துரிதமாக ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
June 21, 2021
Rating:



