இலங்கைக்கு துருக்கி மருத்துவ உதவி

இலங்கைக்கு 10 வென்டிலேட்டர்களை வழங்க துருக்கி அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறது.நட்பும் நல்லெண்ணத்தின் சைக்கினையும் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இந்த வெண்டிலேட்டர்கள் இலங்கைக்கு வழங்கப்பட விருக்கின்றன. 

கடந்த டிசம்பர் மாதம் துருக்கிய ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்துகான், தொற்றுநோய்களின் போது சர்வதேச ஒற்றுமை மற்றும் உதவியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசியிருந்தார். 

சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது முதல் துருக்கி சுமார் 156 நாடுகளுக்கும் ஒன்பது சர்வதேச அமைப்புகளுக்கும் உதவிகளை வழங்கியுள்ளது.



இலங்கைக்கு துருக்கி மருத்துவ உதவி இலங்கைக்கு துருக்கி மருத்துவ உதவி Reviewed by Editor on June 10, 2021 Rating: 5