தற்கால நிலவரம் தொடர்பில் நாளை ஜனாதிபதி சிறப்புறையாற்றுகிறார்!!!

நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் சுகாதார நெருக்கடியின் உண்மை நிலை, மற்றும் அதிலிருந்து நாட்டினை மீட்டெடுக்க எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கவிருக்கும் செயற்திட்டங்கள் தொடர்பிலும்,

இந்த உலகளாவிய நோய்த்தொற்று நிலையிலும் நாட்டின் பொருளாதாரச் செழிப்பை இலக்காகக் கொண்டு எமது அரசாங்கம் முன்னெடுத்துவரும் மற்றும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் என்பன தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாளை (25) வெள்ளிக்கிழமை இரவு 8.30மணிக்கு உரையாற்றவுள்ளார்.

நாட்டின் அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாகவும் இவ்வுரையாடலை கேட்க முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




தற்கால நிலவரம் தொடர்பில் நாளை ஜனாதிபதி சிறப்புறையாற்றுகிறார்!!! தற்கால நிலவரம் தொடர்பில் நாளை ஜனாதிபதி சிறப்புறையாற்றுகிறார்!!! Reviewed by Editor on June 24, 2021 Rating: 5