டெல்ற்றா (Delta variant) இலங்கையிலும் பரவுகிறதா??

அண்மைக்காலம் முதல் இந்தியாவில் பரவி வரும் கொவிட் - 19 வைரஸின் விகாரமைடந்த வடிவமான டெல்ற்றா (Delta variant) இலங்கையிலும் காணப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இப்புதிய டெல்ற்றா வைரஸானது முதலில் தோன்றிய கொவிட் - 19ஜ விட துரிதமாக பரவுகின்றமை பொது மக்களிடையே பீதியை அதிகப்படுத்தியுள்ளது.

எனவே இந்நிலைமை மோசமடைவதை தவிர்க்க வேண்டுமாயின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை நாம் தீவிரமாக கடைப்பிடிப்பது மிக அவசியமாகும்.

1. அதிக சன நெரிசல் மிக்க இடங்களைத் தவிர்த்தல்.
2. காற்றோட்டமற்ற விதத்தில் ஜன்னல் மற்றும் கதவுகள் மூடப்பட்டுள்ள இடங்களைத் தவிர்த்தல்
3. நபர்கள் நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயமுள்ள இடங்களில், அவ்வாபத்து அதிகம் இருப்பதால் அவ்விடங்களைத் தவிர்த்தல்.

தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்படி இடங்களுக்கு செல்ல நேர்ந்தால் கீழ் காணும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்:

1. சரியான விதத்தில் முகக்கவசத்தை அணிந்து கொள்ளல்
2. கைகளை சுத்தமாக வைத்திருத்தல்

3. நபர்களுக்கிடையே குறைந்த பட்சம் இரண்டு மீற்றர் தூர இடைவெளியைப் பேணல்.

உங்களுக்கு காய்ச்சல் அல்லது தடிமல் இருப்பின் அதற்காக சிகிச்சை பெறுவதற்காகவேயன்றி வேறு தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பதே சிறந்ததாகும். அத்துடன் தற்போதைய சூழலில் இது உங்கள் சமூகப் பொறுப்பாகும்.

நீங்கள் கொவிட்-19 நோய்க்கு எதிராக தடுப்பூசி பெற்ற ஒருவராக இருப்பினும், உங்களுக் நோய்த் தொற்று ஏற்பட்டால், அந்நோய் காரணமாக உங்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும் நிலை அல்லது அதனால் மரணம் சம்பவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியப்பாடு மிகக் குறைவு. ஆனால் உங்கள் குடும்பத்தவருக்கு உங்கள் மூலம் நோய் தொற்று ஏற்படும் ஆபத்து முழுமையாக நீங்கி விட்டது எனக்கூற முடியாது.

பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட நோய்த்தவிர்ப்பு நடவடிக்கைகளை மிகச்சரியாக கடைபிடிப்படிப்பதன் மூலம் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு கொவிட்-19 மற்றும் விகாரமடைந்த டெல்ற்றா வைரஸ் மூலம் ஆபத்து ஏற்படுவதை நீங்கள் கணிசமாக குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்திருங்கள். 



டெல்ற்றா (Delta variant) இலங்கையிலும் பரவுகிறதா?? டெல்ற்றா (Delta variant) இலங்கையிலும் பரவுகிறதா?? Reviewed by Editor on June 24, 2021 Rating: 5