தள வைத்தியசாலைக்கு ஒட்சிசன் சிலிண்டர் காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் அன்பளிப்பு!

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி தள வைத்தியசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு அவரசத் தேவைப்பாடாக காணப்பட்டு வந்த ஒட்சிசன் சிலிண்டர் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் பொது மக்கள் மத்தியில் வேண்டுகோள் விடுத்திருந்தது. 

அதனடிப்படையில் காத்தான்குடி சமூகக் குழுமம் குறித்த வேண்டுகோளை குழும்ப உறுப்பினர்களின் அன்பளிப்புடன் இன்று (20) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில்  காத்தான்குடி தள வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் அவர்களிடம் வைத்தியசாலை முன்றலில் வைத்து கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எஸ்.எம்.அஸ்பர், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி சமூகக்குழும உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 




தள வைத்தியசாலைக்கு ஒட்சிசன் சிலிண்டர் காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் அன்பளிப்பு! தள வைத்தியசாலைக்கு ஒட்சிசன் சிலிண்டர் காத்தான்குடி சமூகக் குழுமத்தினால் அன்பளிப்பு! Reviewed by Editor on June 20, 2021 Rating: 5