(சர்ஜுன் லாபீர்)
நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் பயணத்தடையின் காரணமாக மக்கள் தங்களுடைய அத்தியாவசியமான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அத்தியாவசிய தேவைக்கு வழங்கிய சலுகைகளையும் , அனுமதியையும் சிலர் துஸ்பிரயோகம் செய்கிறார்கள் இவர்களை நாங்கள் அடையாளம் காண வேண்டும். நடமாடும் விற்பனைக்காக அனுமதியினை பெற்றுவிட்டு தங்களின் வியாபார ஸ்தலங்களை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டத்திற்கு முரணானது. எனவே அவ்வாறானவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி உடன் பறிமுதல் செய்யப்பட்டு இரத்து செய்யப்படும். என கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தெரிவித்தார்.
அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொரோனா நிதியினை மக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தினை துரிதப்படுத்துவதற்கு கிராம சேவகர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு விளக்களிக்கும் நிகழ்வு நேற்று (1) பிரதேச செயலகத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.இந் நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கம் அளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அரசாங்கத்தினால் பயணத்தடை நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்காக 5 வகையான அனுமதி படிவங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தி அதன் ஊடாக அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. அவ்வாறான அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்காக அனுமதியினை பெற்றவர்கள் இன்று அதனை துஸ்பிரயோகம் செய்து வருகின்றனர் அவ்வாறனவர்களை கண்டறிவதற்காக பொலிஸ்,இராணுவத்தினர் மற்றும் சுகாதார துறையினரோடு இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
பெருமளவில் மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், சில்லரை கடை வியாபாரிகள் நடமாடும் விற்பனை ஊடாக மக்களுக்கு பொருட்களை வழங்காமல் தங்களுடைய வியாபார தளங்களிலேயே வைத்து விற்பனை செய்வதாக தங்களுக்கு பல்வேறுபட்ட முறைப்பாடுகள் நாளாந்தம் வந்துகொண்டே உள்ளன.எனவே அவ்வாறு அனுமதியினை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களின் அனுமதியை இரத்து செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளோம்.
மேலும் நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலை நம் பிரதேசத்தையும் நெருங்கி வருவதால் அதிலிருந்து எமது மக்களையும் பிரதேசங்களையும் பாதுகாக்கும் பொருட்டு எமது அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அவை ஒவ்வொரு திட்டங்களுக்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் முனைப்புடன் செயற்பட்டால் இந்த கொடிய கொரோனா.நோய்யினை எமது பிரதேசத்தில் மட்டும் அல்ல.முழு நாட்டிலும் இருந்து விரட்டியடிக்க.முடியும் என தெரிவித்தார்.
எமது நாட்டின் அரசாங்கமும் சுகாதார துறையினரும் முப்படைகளும் இரவு பகலாக கொரோனா நோயினை இல்லாதொழித்து எமது மக்களை பாதுகாப்பதற்காக கடுமையான முறையில் கஸ்டப்படுகின்றனர்.அவர்களுடைய துறைசார்ந்த செயற்பாடுகளுக்கு நிர்வாக த் துறையில் உள்ள நாம் அனைவரும் நமது முழுமையான ஒத்துழைப்புகளையும், ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும்.என்பதோடு கிராம சேவகர்கள் பிரிவு தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அண்மையில் அரசாங்கத்தினால் பிரதேச செயலக செயற்பாடுகள் கிராம சேவகர்கள்,மற்றும்.சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் அனைத்தையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்ததை தொடர்ந்து நாம் அனைவரும் கொரோனாவினை முழுமையாக இல்லாதொழித்து 24 மணித்தியாலமும் மக்கள் நலனுக்காக செயற்பட தயார் நிலையில் இருக்க வேண்டும்.என குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.சாலிஹ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். ரம்சான். ராம சேவர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல் பதுருத்தின், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.யாஸின் பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதிப் பத்திரங்கள் உடனடியாக இரத்து செய்யப்படும் - பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி
Reviewed by Editor
on
June 02, 2021
Rating:
