கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்...

பயணக்கட்டுப்பாடு காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5 ஆயரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று (02) ஆரம்பமாகவுள்ளது. இதற்காக 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதற்குத் தகுதி பெற்றிருக்கும் குடும்பங்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைப் பெறவுள்ளனர்.

சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.





கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்... கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்... Reviewed by Editor on June 02, 2021 Rating: 5