(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மது அசனார் லெப்பை இப்திகார் முழு தீவுக்குமான சமாதான நீதவனாக கடந்த 2021.05.31ஆம் திகதி அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற மாவட்ட நீதிபதி கெளரவ எம்.எச்.முஹம்மட் ஹம்சா அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திலும், உயர் தரக் கல்வியை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) கற்று அதன் பின்னர், உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மற்றும் வணிகத்துறையில் முதுமாணி (2nd class) பட்டத்தையும், மனித உரிமைகள் கற்கை நெறியில் டிப்ளாமோவையும், உளவள ஆலோசனை துறையில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில் கணக்காய்வு உத்தியோகத்தராகவும் கடமை புரியும் இவர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த அசனார் லெப்பை (ஸ்பெட் கலாவர்) மஸாஹீனா உம்மா தம்பதியினரின் அன்பு புதல்வர் ஆவார்.
Reviewed by Editor
on
June 15, 2021
Rating:
