(றிஸ்வான் சாலிஹூ)
Iconic Youths சமூக சேவை அமைப்பின் உறுப்பினர் காத்தான்குடியை சேர்ந்த 27 வயதுடைய ரிஹாப் முஹம்மட் செவ்வாய்க்கிழமை (15) கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
(இன்னாலில்லாஹி வயின்ன இலைஹி ராஜூஊன்).
சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இனணந்து கொண்ட இவர், சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒருவராக காணப்பட்டார்.
இளவயதில் சமூக பணியில் ஈடுபாடு கொண்ட ரிஹாப் முஹம்மட் தன்னால் முடிந்தவரை இன மதங்களுக்கு அப்பால் சகலருக்கும் உதவி செய்துள்ளதோடு, பெரியவர்களோடு மரியாதையுடனும், சிறுவர்களுடன் பாசமாகவும் பழகக்கூடியவராக இருந்தவராவார்.
இவர் முன்னாள் காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் பேஷ் இமாம் மெளலவி எஸ்.எல்.கலீலுர் றஹ்மான் (அஸ்ஹரி) அவர்களது அன்பு மகனாவார்.
இறைவன் அவரை பொருந்திக் கொண்டு ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அவருக்கு வழங்குவானாக.. ஆமீன்.

Reviewed by Editor
on
June 16, 2021
Rating: