(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச மட்ட Covid 19 குழுக்கூட்டம் இன்று (17) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை கெளரவ முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான், பொலிஸ் உயரதிகாரி மற்றும் 49 வது படைப்பிரிவின் உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க உப தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
நாடு தழுவிய ரீதியில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கோவிட் 19 அபாயத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சுகாதார வழிமுறைகள் பற்றி இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Reviewed by Editor
on
June 17, 2021
Rating:


