(றிஸ்வான் சாலிஹு)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைவாக அக்கரைப்பற்று கடற்கரை பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எப்.எம்.ஏ.காதர் அவர்களின் ஆலோசனைக்கமைவாக இன்று (24) வியாழக்கிழமை மாலை வேளையில் அண்டிஜன், மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்று அபாயத்தை கட்டுப்படுத்தும் முகமாகவும் மற்றும் பயணத்தடை சட்டத்தை மீறி கடற்கரைப்பகுதியில் நடமாடியவர்களுக்கே இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பொதுமக்கள் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்தும், பொறுப்புடன் நடந்து இந்த அபாயகரமான கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும், வெளியில் செல்லும் பொதுமக்கள் சுகாதார விதி முறைகளை பேணி முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்படுள்ளதோடு, இவைகள் அனைத்தையும் அனைவரும் பின்பற்றி இருக்குமாறும் சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
