மறைந்த ஜனாதிபதியின் ஞாபகார்த்த மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!!!

மறைந்த சனாதிபதி அதிமேதகு ரணசிங்க பிரேமதாச அவர்களின் 97 வது ஜனன தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''விபக்ஷயே ஹுஸ்மக் ' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டத்தின் 17 வது கட்டமாக முப்பத்தாறு இலட்சத்து இருபத்தொன்பதாயிரம் ரூபா (ரூ.3,629,000.00)  பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் பலப்பிட்டி தள மருத்துவமனைக்கு இன்று (23) நன்கொடையாக வழங்கப்பட்டது.

அதன் பணிப்பாளர் மருத்துவர் பீ.ஜீ.ஏ சந்தன ரத்நாயக்க அவர்களினால் குறித்த நன்கொடை பொறுப்பேற்கப்பட்டது. இதற்கு அமைவாக ரூபா .825,000.00 பெறுமதி வாய்ந்த Multipara monitors (Edan iM60 patient Monitors) மூன்று, ரூபா.250,000.00 பெறுமதி வாய்ந்த Multipara monitor (Edan iM60 patient Monitors) இயந்திரமொன்றும், ரூபா 2,400,000.00 பெறுமதி வாய்ந்த  இரண்டு Optiflow Nasal Therapy  இயந்திரங்களும், ரூபா. 110,000.00 பெறுமதி வாய்ந்த Pulse Oximeter உம், ரூபா.44,000.00 பெறுமதி வாய்ந்த Cannula 8 உபகரணங்களும் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டன.​

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''விபக்ஷயே ஹுஸ்மக்' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.






மறைந்த ஜனாதிபதியின் ஞாபகார்த்த மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!!! மறைந்த ஜனாதிபதியின் ஞாபகார்த்த மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!!! Reviewed by Editor on June 23, 2021 Rating: 5