அட்டாளைச்சேனையில் ரணிலுக்கு ஆசி வேண்டி துஆ பிரார்த்தனை..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இன்று (23) புதன்கிழமை சத்திய பிரமாணம் செய்து கொண்ட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆசி வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை இன்று (23) அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதான அமைப்பாளர் யூ‌.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ்) அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக நடைபெற்றது.


அட்டாளைச்சேனையில் ரணிலுக்கு ஆசி வேண்டி துஆ பிரார்த்தனை..! அட்டாளைச்சேனையில் ரணிலுக்கு ஆசி வேண்டி துஆ பிரார்த்தனை..! Reviewed by Editor on June 23, 2021 Rating: 5