சிகரம் தொட்ட ஸஹிரியன் - உபவேந்தராக நியமனம்.

 சிகரம் தொட்ட ஸஹிரியன்; கல்லூரின் பழைய மாணவர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் அவர்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமனம்.

இலங்கை தென்கிழக்குப்‌ பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின்‌ பீடாதிபதி பேராசிரியர்‌ கலாநிதி றமீஸ்‌ அபூபக்கர்‌ அப்பல்கலைக்கழகத்தின்‌ உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால்‌ நியமிக்கப்பட்டுள்ளார்‌.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர்‌  றமீஸ்‌ அபூபக்கர்‌ அவர்கள் பாடசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினராகவும் தற்போது செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இலங்கை தென்கிழக்குப்‌ பல்கலைக்கழக வரலாற்றில்‌ அப்பல்கலைக்கழகத்தின்‌ மாணவர்‌ ஒருவர்‌ உப வேந்தராக நியமிக்கப்படுவது இதுவே முதற்‌ தடவையாகும்‌. இவர்‌ இலங்கை தென்கிழக்குப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கலை கலாசார பீடத்தில்‌ சமூகவியல்‌ முதற்தொகுதி மாணவராக கல்வி கற்று, அப்பீடத்தின்‌ பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, முதல்‌ சமூகவியல்‌ பேராசிரியராக பதவி உயர்வு பெற்றவர்‌. பேராசிரியர்‌ றமீஸ்‌ அபூபக்கர்‌ இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில்‌ மிகவும்‌ இள (43) வயதில்‌ உப வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பாடசாலை வரலாற்றில் ஒரு பழைய மாணவர் உபவேந்தர் என்னும் உச்ச பதவியை அலங்கரிப்பது இதுவே முதல் தடவையாகும். ஒட்டுமொத்த பாடசாலை சமூகமும் பேராசிரியர்  ரமீஸ் அபூபக்கர் அவர்களை வாழ்த்தி அவருடைய பணி சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறது.

எஸ்.எம். சஹாப்தீன், நிந்தவுர்



சிகரம் தொட்ட ஸஹிரியன் - உபவேந்தராக நியமனம். சிகரம் தொட்ட ஸஹிரியன் - உபவேந்தராக நியமனம். Reviewed by Sifnas Hamy on June 22, 2021 Rating: 5