அல்-பாயிஷா மகா வித்தியாலய புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக எம்.எச்.பதுருடீன்  (SLPS-1) அவர்கள் இன்று (22) செவ்வாய்க்கிழமை புதிய அதிபராக நியமிக்கப்பட்டு, அவர் தனது கடமைகளை பாடசாலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இப் பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய எம்.ஏ.ஏ.இஸ்ஸதீன் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (18) ஓய்வு பெற்று சென்றமையினால் தற்போது புதிய அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.கலீலூர் றஹ்மான், முன்னாள் அதிபர் எம்.ஏ.ஏ.இஸ்ஸதீன், அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.றிபாயுடீன், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.





அல்-பாயிஷா மகா வித்தியாலய புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!!! அல்-பாயிஷா மகா வித்தியாலய புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்!!! Reviewed by Editor on June 22, 2021 Rating: 5