கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் முயற்சியின் கீழ் நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் புதிய விடுதி நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இன்று (14) திங்கட்கிழமை நிந்தவூர் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலையில் 13 மில்லியன் ரூபாய் நிதி ஒதிக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு வைத்தார்.
இவ்விடுதி அமைப்பதன் நோக்கமானது எமது பிரதேசங்களில் காணப்படும் வலது குறைந்த மற்றும் பக்கவாதம் போன்றவையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவே இவ் விடுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் மற்றும் உதவி பணிப்பாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
