மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தன்னை கைது செய்து தடுத்து வைத்துள்ளமை சட்ட விரோதமானது என அசாத் சாலி தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணை இன்று (14) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்த அரச சொலிஸிட்டர் ஜெனரல் திலீப பிரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஆளுநர் தொடர்பான விசாரணைகள் நிறைவு!!!
Reviewed by Editor
on
June 14, 2021
Rating:
Reviewed by Editor
on
June 14, 2021
Rating:
