(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமையில் நீண்ட காலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் சில அதிகாரிகளினால் இழுத்தடிப்பு செய்யப்பட்ட வீதிக்கு பிரதான நீர் இனைப்பு பெறுவதற்கான குழாய் இணைப்பு இன்று (12) சனிக்கிழமை பொருத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐய்யூப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் முன்மொழியப்பட்ட புராதான இடங்களை பராமரித்தல் என்ற அடிப்படையில் நூறு வருடங்கள் பழமை வாய்ந்த இசங்கணிச்சீமை கிராமத்தில் அமைந்துள்ள ஷியாறம் வீதிக்கு மக்களின் பங்களிப்புடன் பிரதான குடிநீர் குழாயே இன்று பொறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக், கெளரவ அதிதியாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜித், பிரதேச சபை கெளரவ உறுப்பினர்கள், நீர்வழங்கல் சபை உத்தியோகத்தர்கள், இசங்கணிச்சீமை பள்ளிவாசல் தலைவர் உட்பட நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
June 12, 2021
Rating:


