மருதமுனை - கல்முனை கடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு..!

கல்முனை தொடக்கம் மருதமுனை வரையான சுமார் 2.6 km கடற்கரை வீதி காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

இதற்கான  வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினருமான றிஸ்லி முஸ்தபாவின் பங்கேற்புடன் நேற்று (22) மாலை மருதமுனை கடற்கரை வீதியில் இடம்பெற்றது.

நாட்டின் கொவிட் சட்டதிட்டத்திற்கு அமைவாக 15 பேர்க்குள் மட்டுப்படுத்தப்பட்டு மிக எளிமையாக பல அதிகாரிகளின் பங்கேற்புடன் மாத்திரம் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சட்டத்தரணி அன்ஷார் மொளலானா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, வீதி அபிவிருத்தி பொறியியலாளர் எம்.ஐ.எம்.றியாஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகஸ்தர்கள், உலமாக்கள், கல்விமான்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






மருதமுனை - கல்முனை கடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு..! மருதமுனை - கல்முனை கடற்கரை வீதி கார்பட் வீதியாக புனரமைப்பு..! Reviewed by Editor on June 23, 2021 Rating: 5