(எஸ்.எம்.அரூஸ்)
பொத்துவில் பிரதேத்தில் இன பாகுபாடின்றி பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் சசிதரனின் வேண்டுகோளின் பேரில் சாளம்பையடி பிள்ளையார் வீதியை கொங்ரிட் வீதியாக அபிவித்தி செய்வதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஆரம்பித்து வைத்தார்.
நீண்ட வரலாற்றைக் கொண்ட இப்பாதை அபிவித்தி செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்ததால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வந்தனர்.
இப்பாதையை அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்து பிரதேச சபை உறுப்பினர் சசிதரன் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.
இதற்கமைவாக துரிதமாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் 1200 மீற்றர் கொங்ரீட் வீதியாக இப்பாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார்.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் றஹீம், உதவித் தவிசாளர் பெருமாள் பார்த்தீபன், பிரதேச சபை உறுப்பினர் சசிதரன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் வை.எல்.நியாஸ் உட்பட அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்..
