(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இயங்கி வருகின்ற அரச வைத்தியர்கள் சங்க அக்கரைப்பற்று கிளையில் அங்கத்துவம் பெறுகின்ற வைத்தியர்களின் பங்களிப்புடன் 50,000 ரூபாய் நிதி அக்கரைப்பற்று அந்நூர் சமூக சேவை நிறுவனத்திற்கு நேற்று (08) செவ்வாய்க்கிழமை சங்கத்தின் தலைவர் பொது வைத்திய நிபுணர் டாக்டர் அஹமட் பரீட் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
covid-19 மூன்றாம் அலையினால் ஏற்பட்டுள்ள பயணத்தடை மற்றும் கடையடைப்பினால் பாதிக்கப்பட்டு வீடுகளிலே தொழிலற்று இருக்கின்ற மிகவும் தேவையுடைய 25 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்குமாறு வேண்டிக்கொண்டதற்கு இணங்க அந்த பணம் பெறப்பட்டு உரியவர்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.
அக்கரைப்பற்று-13ம் பிரிவில் கடலை அண்டி கரையோரத்தில் வாழ்கின்ற சுமார் 26 குடும்பங்களுக்கு 1900 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளே வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிதியினை வழங்கி வைத்த அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அரச மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரும் பொது வைத்திய நிபுணருமான டாக்டர் அஹமட் பரீட், செயலாளர் டாக்டர் ஏ. எல். அலாவுதீன், பொருளாளர் டாக்டர் எம். ஏ. அம்ரின், சங்க உறுப்பினர்களான டாக்டர் சியாத், டாக்டர் அப்துல் ரசாக், டாக்டர் அப்துல் ஹுதா ஆகியோர்களுக்கு அந்நூர் நிறுவனம் தங்களது உளப்பூர்வமான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
