கல்முனை பிரதேச செயலாளரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள்

(சர்ஜுன் லாபீர்)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19  அசாதாரண சூழ் நிலைக்கு மத்தியில்  நாடு பூராகவும்  பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை பிரதேசத்தில் பொது மக்கள் அன்றாட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நடமாடும் விற்பனையாளர்களுக்கு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அவ் அனுமதிப் பத்திரங்களை நடமாடும் விற்பனைக்காக பயன்படுத்தாமல் தங்களது  கடைகளை திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை இன்று(9) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையிலான குழுவினரால் திடீர் விஜயம் மேற்கொள்ளப்பட்டு  அவர்களின் 
அனுமதிப் பத்திரங்கள் உடன் பறிமுதல் செய்யப்பட்டு இரத்து செய்யப்பட்டது.

முறையான சுகாதார வழிகாட்டல்களுடன் உரிய அனுமதிகளோடும்,கட்டுப்பாடுகளோடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாத வியாபரிகளுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு அடுத்து வரும்  நாட்களில் குறித்த வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும் பிரதேச செயலாளரினால் வியாபாரிகளுக்கு அறிவுருத்தப்பட்டுள்ளது.

இக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா,அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ் ரியாஸ், கணனி உத்தியோகத்தர் எஸ்.எம் ஜிஹான்,ஆகியோர் கலந்து கொண்டனர்.








கல்முனை பிரதேச செயலாளரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் கல்முனை பிரதேச செயலாளரினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் Reviewed by Editor on June 09, 2021 Rating: 5