(றிஸ்வான் சாலிஹு)
கொரோனா தொற்றிற்றான தடுப்பூசி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் 60வயதுக்கு மேற்பட்ட இருபாலருக்கும் அத்தோடு 35வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களுக்கும் மிக விரைவில் வழங்கப்படவுள்ளது.
இந்த செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் தடுப்பூசி வழங்குவதற்கான மத்திய நிலையங்களை ஆயத்தம் செய்வதற்கான கள நடவடிக்கையை அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தலைமையிலான குழுவினர் தற்போது ஆயத்தம் செய்து வருகின்றனர்.
அதனடிப்படையில், இன்று (11) வெள்ளிக்கிழமை காலை அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய குழுவினர் வருகை தந்து தடுப்பூசி வழங்குவதற்கான இடத்தை பார்வையிட்டார்கள்.
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர், பாடசாலை அதிபர் எஸ்.றிபாயுடீன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம்.ஏ.எம்.பாயிஸ், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
June 11, 2021
Rating:



