(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் எதிர்வரும் 2021.06.10ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்படுவதாக பாடசாலையின் அதிபர் எஸ்.றிபாயுடீன் எமது இனையத்தள செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஆயிரம் தேசிய பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மாகாண பாடசாலைகள் சில தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்படுவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள பட்டியலில் அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகள் உத்தியோகபூர்வமாக தரம் உயர்த்துவது தொடர்பாக இன்று (03) காலை மாகாண கல்விப் பணிப்பாளர் மற்றும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் Zoom தொழில்நுட்ப வசதியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (10) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து ஆயத்தங்களையும் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக அதிபர் தெரிவித்துள்ளார்.
இப்பாடசாலையின் தேசிய பாடசாலை கனவினை ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், பல கஷ்டங்களுக்கு மத்தியில் செய்து முடித்து, அதன் முதலாவது அதிபர் என்ற பெருமை தற்போதைய அதிபர் எஸ்.றிபாயுடீன் அவர்களுக்கே சாரும்.
எமது பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சியில் புத்தெழுச்சியை ஏற்படுத்துவதும் வகையில் இப்பாடசாலை மேலும் சிறந்து விளங்க பாடசாலை சமூகம் பாடசாலையின் அதிபர் மற்றும் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிபர் எஸ்.றிபாயுடீன் கேட்டுள்ளார்.
