முன்னாள் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
தன்னை விடுதலை செய்யுமாறு கோரி அசாத் சாலி தாக்கல் செய்த மனு இன்று (28) திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிஸிஸ்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசாத் சாலிக்கு எதிராக பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்!!
Reviewed by Editor
on
June 28, 2021
Rating:
