சுகாதார வைத்திய அதிகாரியின் சேவைக்கு, Covid-19 தடுப்பு செயலணியின் தலைவர் தில்ஷான் நன்றி தெரிவிப்பு!!!
கொரோனா தொற்றின் தொடர்ச்சியான அதிகரிப்பினாலும் மரணத்தினாலும் நாடு முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் கொரோனா தொற்றினை முற்றாக ஒழிக்க இரவு பகலாக பலரும் பல வழிகளில் முயற்சித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.
அதனடிப்படையில் இத்தொற்றினை அக்கரைப்பற்று பிரதேசத்திலிருந்து முற்றாக இல்லாதொழிக்க, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் அவர்களின் மேற்பார்வையில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர் அவர்கள் பல காத்திரமான விடயங்களை
கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருவதை பலரும் அறிந்திருப்பீர்கள்.
Iconic Youths, Inspiring Youths, Charity Welfare Youths மற்றும் இன்னும் சில இளைஞர் அமைப்புக்களுடான கலந்துரையாடலின் படி பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பல செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்து எமது மக்களை இக்கொடிய தொற்றிலிருந்து பாதுகாக்க இரவு பகலாக போராடும் சுகாதார வைத்திய அதிகாரிக்கு, அக்கரைப்பற்று Covid-19 தடுப்பு செயலணியின் தலைவரும் Iconic Youths அமைப்பின் தலைவரும், பிரதேச இளைஞர் கழகங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவருமான தில்ஷான் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு இதற்காக களத்தில் நின்று பணிபுரியும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஏனைய ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
மேலும் இத்திட்டத்திற்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் அக்கரைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி சமீலுல் இலாஹி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு மேலும் இவ் இக்கட்டான சூழ்நிலையில் எமது மக்களின் நலன்கருதி இவ்வாறு பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் எம்மாலான முழுமையான ஆதரவினை வழங்க முன்வர உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
June 15, 2021
Rating:

