அக்கரைப்பற்றை பாதுகாக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் - பி.ச.உறுப்பினர் ரீ.எம்.ஐய்யூப்

(றிஸ்வான் சாலிஹு)

Covid-19 மூன்றாம் அலையில் நமது பிராந்தியத்தில் சிறிதளவான  தொற்றாளர்கள் காணப்பட்டாலும்  நேற்று இன்றைய கள நிலவரங்கள் அதிகமான தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதினால்  நமது அக்கரைப்பற்று பிராந்தியத்தில் இருக்கின்ற துறை சார் நிபுணர்கள் இதற்குரிய சரியான ஒரு தீர்வை எடுக்கத் தவறினால் நமது பிராந்தியம் பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பை சந்திக்கக் கூடிய சாத்தியம் உணரப்படுகின்றது என்று அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் கெளரவ ரீ.எம்.ஐய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்றிலிருந்து ஒரு வார காலத்துக்குள் அக்கரைப்பற்று மக்களின் பிரதான தொழிலாக செய்து கொண்டிருக்கும் வயல் அறுவடை இருப்பதினால் வயல் அறுவடை காலங்களில் இந்த பிராந்திய மக்கள் அதிகமாக வயல் பிராந்தியங்களை அறுவடை செய்வதில் கவனம் செலுத்துவார்கள்.

ஆகவே,அதற்கு முன்னுள்ள நாட்களை பயன்படுத்தி தொற்றாளர்களை குறைப்பதின் ஊடாக நமது பிராந்தியத்தை பாதுகாக்க முடியும். இல்லையென்றால் அடுத்த வாரம் வயல் அறுவடை செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நமது பிராந்தியத்தில் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக  அடையாளம் காணப்பட்டால் பிராந்தியம் முடக்கப்பட்டு அக்கரைப்பற்று மக்களின் பிரதான தொழில் வயல் என்பதால் நமது பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எனவே துறை சார் அதிகாரிகள் இந்த விடயங்களை சிந்தித்தார்களோ என்ற ஒரு கேள்வி தோன்றுகின்றது. இந்த விடயம் சம்மந்தமாக சரியான நேரத்தில் கவனம் எடுக்க தவறினால் இந்த பிராந்தியத்தின் பிரதான தொழில் பாரிய பின்விளைவுகளை பிராந்தியத்திற்கு ஏற்படுத்தக்கூடும்.

எனவே ஒரே வட்டத்துக்குள் சில முடிவுகளை எடுக்காமல் பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது நமது பிராந்தியங்களில் இருக்கின்ற புத்திஜீவிகளை, அனுபவசாலிகளை ஒன்றினைத்து இந்த விடயம் சம்மந்தமாக அவசரமாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய தேவை தற்காலத்தில் உணரப்படுகின்றது.

நமது பிராந்தியத்தில் நூற்றுக்கு 75 வீதமானவர்களுக்கு covid-19 தடுப்பூசிகளை அவசரமாக இடுவதன் மூலம் இப்பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக தாக்கத்தை முறியடிக்க முடியும்.

தடுப்பூசி சம்மந்தமாக நமது பிராந்திய மக்கள் இன்னும் தெளிவின்மையால் தடுப்பூசி சம்மந்தமான தெரிவுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகவும், சுகாதாரத் துறையும் ,முப்படையினரும் மக்கள் மயப்படுத்தி தெளிவுபடுத்த வேண்டிய ஒரு தேவை நமது மக்களிடையே  உணரப்படுகின்றது.

முடிவுகள் அவசரமாக எடுக்கப்பட்டு பிராந்தியத்தை வயல் அறுவடைக்கு முந்திய காலங்களில் முடக்குவதன் ஊடாக நமது பிராந்தியத்தின் பிரதான தொழிலான வயல் அறுவடை காலம் சிறப்பாக அமையும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

அப்படி இல்லையென்றால்,தற்காலத்தில் திறந்து இருந்து பிரதான தொழில் வயல்  அறுவடை செய்யும்போது பிராந்தியம் முடக்கப்படுமாக இருந்தால் பிரதான பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும் என்பதை சுட்டிக் காட்டுகின்றேன் என்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






அக்கரைப்பற்றை பாதுகாக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் - பி.ச.உறுப்பினர் ரீ.எம்.ஐய்யூப் அக்கரைப்பற்றை பாதுகாக்க உரிய அதிகாரிகள் கவனம் எடுக்க வேண்டும் - பி.ச.உறுப்பினர் ரீ.எம்.ஐய்யூப் Reviewed by Editor on July 01, 2021 Rating: 5