வணக்கஸ்தலங்களை திறக்க சுகாதார பிரவு அனுமதி!!!

இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டாக்டர் அசேல குணவர்தன சுற்று நிரூபமொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

மூடப்பட்டிருந்த வணக்கத்தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளை நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண மண்டபத்தில் 25 சதவீத எண்ணிக்கையிலானோருடன் திருமணங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, செயலமர்வுகளை 50 பேருடன் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வணக்கஸ்தலங்களை திறக்க சுகாதார பிரவு அனுமதி!!! வணக்கஸ்தலங்களை திறக்க சுகாதார பிரவு அனுமதி!!! Reviewed by Editor on July 10, 2021 Rating: 5