இரண்டாம் கட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில்  முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கிடைக்கப்பட்டுள்ள 50,000 தடுப்பு ஊசிகளில் முதல் கட்டமாக உத்தியோகத்தர்களுக்கு இரண்டாவது டோஸ் ஏற்றும்  நடவடிக்கையானது  இன்று 08.07.2021 ஆந் திகதி வியாழக்கிழமை வின்சன்ட்  மகளீர் உயர்தர பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவிற்குட்பட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிசார் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் முன்னுரிமையளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான தடுப்பூசிகள் இன்றைய தினம் ஏற்றப்பட்டு வருவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளை நாளை முதல்  இரண்டாவது டோசினை ஏற்றிக்கொள்ளவுள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







இரண்டாம் கட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்! இரண்டாம் கட்ட சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்! Reviewed by Editor on July 08, 2021 Rating: 5