அம்பாறையில் கிழக்கு மாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு!!!

(றிஸ்வான் சாலிஹு)

அம்பாறை மாவட்ட பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கிழக்கு மாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு அம்பாறை பிரதேச செயலகத்தில் இன்று (08) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இவ் மக்கள் சந்திப்பில் கிழக்கு மாகாண கெளரவ ஆளுனர் அனுராதா ஜஹம்பத், கிழக்கு மாகாண கல்வி பனிப்பாளர் எம்.ரீ.எ.நிசாம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா, ஆளுனரின் இணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பில் விசேடமாக HND English டிப்ளோமா மாணவர்களின் பிரச்சினை தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், அவர்களது பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.





அம்பாறையில் கிழக்கு மாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு!!! அம்பாறையில் கிழக்கு மாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு!!! Reviewed by Editor on July 08, 2021 Rating: 5