(றிஸ்வான் சாலிஹு, பட உதவி - மாதவன்)
சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டாக்டர்.அசேல குணவர்தன தலைமையிலான குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
வைத்தியசாலைக்கு வருகை தந்த சுகாதார அமைச்சின் குழுவினரை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ஆஸாத் எம் ஹனிபா அவர்கள் தலைமையிலான குழுவினர் அவர்களை வரவேற்றார்கள்.
வைத்தியசாலையில் புதிதாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட கொரோனா சிகிச்சைப்பிரிவு சுகாதார அமைச்சின் செயலாளர் நாயகம் அவர்களால் அன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டதுடன், அதற்கான ஒரு தொகுதி உபகரணங்களும் அவரால் வைத்திய அத்தியட்சகரிடம் கையளித்ததும் கூட இவ்வைத்தியசாலையின் சேவையை மேலும் ஊக்குவிப்பதாகவும் அமைந்திருந்தது.
வைத்தியசாலையின் தற்போதைய உடனடித் தேவைகள் குறித்து சுகாதார அமைச்சின் குழுவினருக்கு விளக்கமளிக்கப்பட்டு மகஜரும் ஒன்றும் கையளிக்கப்பட்டதுடன், நிகழ்வுகள் அனைத்தையும் திறம்பட ஏற்பாடு செய்திருந்த புதிய வைத்திய அத்தியட்சகர் டாக்டர்.ஆஸாத்தின் இந்த நல்லிணக்க முயற்சி இந்த வைத்தியசாலையின் ஒரு புதிய மைல்கல்லாக மிளிர இருக்கும் நடவடிக்கை என்றும் வைத்தியசாலை சமூகம் பெருமை பேசுவதும் பாராட்டத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தெளபீக், சுகாதார அமைச்சின் உயரதிகாரிகள், வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 21, 2021
Rating:




