பேலியகொடை புதிய பாலத்தை இணைக்கும், களனி கங்கைக்கு மேலாக அமைந்துள்ள உயர் தொழில் நுட்பத்திலான கேபில் பாலம் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இன்று (10) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் புதிய களனி பாலத்தின் ஆரம்ப நிர்மாண திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டு அதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆரம்ப இடத்திலிருந்து பேலியகொடை பாலம் அமைந்துள்ள சந்தியை உள்ளடக்கும் வகையில் ஆரம்பமான இந்த களனி பால வேலைத்திட்டம் ஒருகொடவத்த சந்தி மற்றும் துறைமுக நுழைவாயில் சந்தியில் நிறைவடைகிறது.
களனி கங்கைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலமானது சுமார் 380 மீற்றர் நீளம் கொண்டதோடு, இது இலங்கையின் முதலாவது அதி உயர் தொழிநுட்ப கேபில்களின் ஊடாக அமையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
