(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று-01, பழைய மக்கள் வங்கி வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ் பாடம்) ஏ.எல்.எம்.மீரா சாஹிப் சேர் இன்று (02) வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினராகவும், பல சமூக சேவை பொதுப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவரும், அனைவருடனும் மிகவும் அன்பாகவும், பண்பாகவும், மென்மையான முறையிலும் பழகக் கூடிய ஒரு நல்லதொரு மனிதர் தான் இவர்.
அக்கரைப்பற்றில் பல மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு தனது கல்வி சேவையின் ஊடாக பல மாற்றங்களை கொண்டு வந்து மாணவ சமூகத்திற்கு நல்லதொரு வழிகாட்டியாக இருந்தவராவார்.
இறைவா, எம்மை விட்டு பிரிந்த இந்த நல்ல மனிதருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
