மெளலவி இனாம் இன்ஷாப் ஜக்கிய காங்கிரஸில் இணைந்தார்!!!

கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த பிரபல பேச்சாளர் மௌலவி இனாம் இன்ஷாப் ஹுசைனி அவர்கள் ஐக்கிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் என்று கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் எம்‌.எஸ்.எம்‌.ஸப்வான் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

இவர் கொழும்பின் பிரபல இஸ்லாமிய ஊடகம் ஒன்றின் தலைவர் பொறுப்பில் உள்ளதோடு, பல சமூக சேவைகளும் செய்து வருபவராவார்.

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி ஸப்வான் அவர்களின் பணிப்புரைக்கு அமைய கட்சியின் தேசிய தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் அவர்களினால் இவ‌ர் வெல்லம்பிட்டிய பிரதேச இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்‌ என்பது குறிப்பிடத்தக்கது.




மெளலவி இனாம் இன்ஷாப் ஜக்கிய காங்கிரஸில் இணைந்தார்!!! மெளலவி இனாம் இன்ஷாப் ஜக்கிய காங்கிரஸில் இணைந்தார்!!! Reviewed by Editor on July 01, 2021 Rating: 5