கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடற்பயிற்சி நிகழ்வு

( எம்.என்.எம்.அப்ராஸ், ஏ.எல். எம்.ஷினாஸ்)

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டுதிறனையும்,உடற்பயிற்சி திறனையும் விருத்திசெய்யும் வகையில் 10 நிமிடம்  உடற்பயிற்சி  செய்யும் நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இன்று (30) இடம்பெற்றது

வலயக்கல்வி பணிப்பாளர் எஸ் .புவனேந்திரன் தலைமையில் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் யு. எல்.  எம். சாஜீத் மற்றும் உடற்கல்வி ஆலோசகர் ஐ. எல். எம். இப்ராஹீம் ஆகியோரின் வழிகாட்டலில் இந்நிகழ்வு கல்முனை வலய பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் ஒழுங்கமைப்பில்  இடம்பெற்றது.

1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ம் திகதி நடைபெற்ற ஒலும்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தி 400M சட்டவேலியோட்டம்  போட்டியில் பங்கு பற்றி வெள்ளிப்பதக்கத்தை எமது நாட்டுக்கு பெற்றுத்தந்த டங்கன் வைட் அவர்களை கௌரவப்படுத்தும் முகமாக ஜூலை 31 தேசிய விளையாட்டு தினமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடற்பயிற்சி நிகழ்வு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு உடற்பயிற்சி  நிகழ்வு Reviewed by Editor on July 30, 2021 Rating: 5