அக்கரைப்பற்றில் தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு!!!

(றிஸ்வான் சாலிஹு)

திரு . டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக் போட்டியின் போது வெள்ளிப் பதக்கமொன்றை வென்றெடுத்த நாளாகிய ஜூலை மாதம் 31 ஆம் திகதியை, 2021ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டதற்கிணங்க "ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித்திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்குவதல்" கருப்பொருளின் அடிப்படையில், தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலளார் அஷ்ஷேக் எம்.எஸ்.எம்.றஸான் தலைமையில் இன்று (30) வெள்ளிக் கிழமை காலை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய விளையாட்டு தினத்தை பிரகடனம் செய்யும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரினதும் ஒத்துழைப்போடு 15 நிமிட உடற் பயிற்சியும் இடம்பெற்றது.

இவ்வருடம் ஜூலை மாதம் 31ஆம் திகதி சனிக் கிழமையாக வருவதால் இந்நிகழ்வை இன்றைய தினத்தில் (30) தேசிய விளையாட்டு தினமாகக் கருதி உரிய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என்று விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

உடற்பயிற்சி மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர் டாக்டர் றிப்னாஸ் மப்ரூகா விசேட உரையாற்றியையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.பாரூக், கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.தாஹீர், அக்கரைப்பற்று இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் எம்.எம்.றுக்ஸான் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு அக்கரைப்பற்று இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.எம்.ஸமீலுல் இலாஹி அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.













அக்கரைப்பற்றில் தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு!!!  அக்கரைப்பற்றில் தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு!!! Reviewed by Editor on July 30, 2021 Rating: 5