தேசிய விளையாட்டு தின உடற்பயிற்சி நிகழ்வுகள்!!!

(பீ.எம்.றியாத்) 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக  ஜூலை மாதம் 31 ஆம் திகதி நாடு பூராகவும் தேசிய விளையாட்டு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

2021.03.30 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க திரு . டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் போது வெள்ளிப் பதக்கமொன்றை வென்றெடுத்த நாளாகிய ஜூலை மாதம் 31 ஆம் திகதியை, 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது.

அந்த வகையில் அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டு திறனையும்,உடற்பயிற்சித் திறனையும் விருத்திசெய்யும் வகையில் வெள்ளிக் கிழமை (30) மு.ப. 09.00 மணிக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலளார் எப்.நஹிஜா முஷாபீர் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஹூசைதீன், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழீல் ,கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜெ.எம். நிஹ்மத்துள்ளா, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.ஏ.சி.ஏ.றகீப், உட்பட உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர் .

இந் நிகழ்வு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஸ்வத் மற்றும் இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.







தேசிய விளையாட்டு தின உடற்பயிற்சி நிகழ்வுகள்!!! தேசிய விளையாட்டு தின உடற்பயிற்சி நிகழ்வுகள்!!! Reviewed by Editor on July 30, 2021 Rating: 5