களுபோவில போதனா வைத்தியசாலையிவ் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!!

களுபோவில போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச தாதியர் உத்தியோகத்தர்கள் புதன்கிழமை (28) களுபோவில வைத்தியசாலைக்கு முன்னால் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள தாதிய ஊழியர்கள்  தொழிற்சங்கம் ஒன்றினைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தனர்.

அதனையடுத்து, களுபோவில வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களும் வைத்தியசாலைக்கு முன்னால் நண்பகல் 12.30 மணிக்கு ஒன்றுகூடி பகல் 1.00 மணிவரையும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.







களுபோவில போதனா வைத்தியசாலையிவ் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!! களுபோவில போதனா வைத்தியசாலையிவ் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்!! Reviewed by Editor on July 29, 2021 Rating: 5