வைத்தியசாலை வீதிக்கான அபிவிருத்தி பணி ஆரம்பம்..

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, நீண்ட காலமாக புனரமைப்பு செய்யாமல் இருந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு அருகாமையில் உள்ள "வைத்தியசாலை வீதிக்கான" அபிவிருத்தி பணிகள் இன்று (05) திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ.றாசீக், உதவித் தவிசாளர் கெளரவ ஏ.எம்.அஸ்ஹர், கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம்.ஐயூப், ஏ.ஜீ.பர்சாத், தபால் அதிபர் யூ.எல்.நவாஸ், மிருக வைத்திய அதிகாரி டாக்டர் றிப்கான், பிராந்திய ஆயுர்வேத வைத்திய அதிகாரி டாக்டர் நபீல், சமுர்த்தி வங்கி முகாமையாளர், பிரதேச சபை செயலாளர் எம்.எல்.இர்பான் ஆகியோர் கெளரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இவ்வீதியில் ஆயுர்வேத மருத்துவ தயாரிப்பு நிலையம், பிரதேச சபை வைத்தியசாலை, சமுர்த்தி வங்கி, பள்ளிவாசல் போன்ற முக்கிய நிறுவனங்கள் இருந்தமையினால் இதற்கு முக்கியத்துவம் அளித்து இவ்வீதி புனரமைப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுவதாக பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம்.ஐயூப் தெரிவித்தார்.






வைத்தியசாலை வீதிக்கான அபிவிருத்தி பணி ஆரம்பம்.. வைத்தியசாலை வீதிக்கான அபிவிருத்தி பணி ஆரம்பம்.. Reviewed by Editor on July 05, 2021 Rating: 5