இலங்கை வீரருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை..!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷவிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வருடகாலத்திற்கு குறித்த போட்டித் தடை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் அவருக்கு 5000 அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்கள் ஊடாக ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இலங்கை வீரருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை..! இலங்கை வீரருக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடகால போட்டித் தடை..! Reviewed by Editor on July 05, 2021 Rating: 5